கரூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 14 இணைகளுக்கு இலவச திருமணம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏழை எளிய ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததன் அடிப்படையில் இன்று கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் ஏழை எளிய 14 இணைகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.

முன்னதாக மணமக்களுக்கு கங்கணம் கட்டியும், யாகம் வளர்த்தியும்,
மந்திரங்கள் ஒதியும், நாதஸ்வர மேளதாளங்கள் முழங்கி மணமக்கள் ஒரு சேர தாலி கட்டி மாலை மாற்றிக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து புதுமண தம்பதிகளுக்கு தலா ஒரு லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
இதில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் புதுமண தம்பதிகளின் ஏராளமான உறவினர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் திருமண விருந்து அளிக்கபட்டது.