முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி 102-வது பிறந்த நாளை முன்னிட்டு, அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில்,முன்னால் முதல்வர் மு.கருணாநிதி 102-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை தனியார் கண் மருத்துவமனை மற்றும் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தினர்.

முகாமில் தலைமை வகித்த, அம்மையநாயக்கனூர் பேரூராட்சி மன்ற தலைவர் எஸ்.பி.எஸ்.செல்வராஜ் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மதுரை தனியார் கண் மருத்துவமனை தகவல் தொடர்பு அலுவலர் ஜோசப்செல்வராஜ் வரவேற்றார். முகாமில் கண்புரை, ஒளித்திறன் குறைபாடு, கிட்ட பார்வை தூர பார்வை, கண் நரம்பு பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது. மேலும் இந்த முகாமில் துப்புரவு மேற்பார்வையாளர் அசோக்குமார் பேரூராட்சி கவுன்சிலர் முகமது நசீர் உட்பட அலுவலக பணியாளர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முகாமில் அம்மையநாயக்கனூர், இடையபட்டி, நக்கம்பட்டி, இந்திராநகர் பகுதிகளை சேர்ந்த 100-க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.