• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இலவச கண் சிகிச்சை முகாம்

ByG.Ranjan

May 27, 2024

மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மூத்த குடிமக்கள் ஆதரவு மன்றம் மற்றும் காரியாபட்டி எஸ் பி எம் டிரஸ்ட் இணைந்து எஸ் பி எம் மருத்துவமனையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தியது.
முகாமிற்கு டிரஸ்ட் நிறுவனர் எம். அழகர்சாமி தலைமை வகித்து துவக்கி வைத்தார் ..ஜனசக்தி பவுண்டேஷன் நிறுவனர் சிவக்குமார் முன்னிலையில் வைத்தார் ..எஸ் பி எம் மருத்துவ அலுவலர் ஹரிஷ் வரவேற்றார்.
முகாமில் வேலம்மாள் மருத்துவமனை டாக்டர்கள் அமிர்தா மகாலட்சுமி ஆகியோர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு கண் பரிசோதனை செய்து கண்பார்வை கண் நரம்பு பரிசோதனை ஒளி த்திறன் பரிசோதனை ,விழித்திரை பரிசோதனை , கண் நரம்பு பரிசோதனை மற்றும் கிட்ட பார்வை தூரப்பார்வை ஒளிவிலகல் போன்ற கண் பரிசோதனைகள் செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நோயாளிகள் அறுவை சிகிச்சைக்காக மதுரை வேலம்மாள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் முடிவில் மக்கள் தொடர்பு அலுவலர் சந்தனகுமார் நன்றி கூறினார்.