மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அகரஹாரத்தில் சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை மற்றும் கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. முகாமை கிருஷ்ணன் கோயில் வெங்கடசாமி ஐயர் துவக்கி வைத்தார். சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை நிர்வாகி நாகு ஆசாரி வரவேற்புரை ஆற்றினார். மருத்துவர்கள் அழகர்சாமி செந்தில் நாகராஜ் பரிசோதனைகள் செய்தனர். முகாமில் பலசரக்கு கடை ஆறுமுகம் சேதுராமன் போத்திராஜ் பால்பாண்டி கலந்து கொண்டனர். 75க்கும் மேற்பட்டோர் கண் பரிசோதனை செய்தனர். இதில் அறுவை சிகிச்சை தேவைப்பட்ட13 நபர்கள் கிருஷ்ணன் கோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நிகழ்ச்சி முடிவில் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
