• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திருச்செந்தூர் சுப்ரமணிசுவாமி கோவிலில் இனி கட்டணமில்லா தரிசனம்..

Byகாயத்ரி

Mar 9, 2022

திருச்செந்தூர் சுப்ரமணிசுவாமி கோவிலில் இன்று முதல் சாமி தரிசனம் செய்வதற்கான கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருச்செந்தூரில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய, ரூ.250, ரூ.100, ரூ.20 கட்டணங்கள் வசூல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று முதல் ரூ.250 சிறப்பு கட்டணம் மற்றும் ரூ.20 கட்டணம் முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருக்கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) வெளியிட்டுள்ள அறிக்கையில் “திருச்செந்தூர் திருக்கோவிலில் நீதிமன்ற உத்தரவுபடி, இந்துசமய ஆணையர் சில நிபந்தனைகைளை உத்தரவாக பிறப்பித்தார்கள்.

இதன்படி ஏற்கனவே நடைமுறையில் உள்ள ரூ.250 கட்டணமும், ரூ.20 கட்டணம் ஆகிய இரு கட்டண தரிசன முறை ரத்து செய்யப்படுகிறது. ரூ.100 கட்டணம் மற்றும் பொதுதரிசனம் மட்டுமே இனி நடைமுறையில் இருக்கும்.இந்த தரிசன முறையிலும் மூலவரை இரு வரிசையில் வருபவர்களும் சமமாக தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தரிசன முறை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கோவில் பாதுகாப்பு பணியில் 125 ஆயுதபடை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர்.முதற்கட்டமாக 60 பேர் ஈடுபட உள்ளனர். ரூ.100 கட்டணம் தரிசனம் மற்றும பொது தரிசன முறையில் வரும் பக்தர்கள் மகா மண்டபத்தில் ஒரே வழியில் அனைத்து பக்தர்களும் சமமாக சென்று மூலவரை தரிசனம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.பக்தர்கள் எவ்வித சிரமமின்றி தரிசனம் செய்ய பல்வேறு மாற்றங்கள் இன்னும் பரிசீலனையில் உள்ளது. விஐபி தரிசனத்திற்கு தனிநேரம் ஒதுக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன என தெரிவித்துள்ளார்.