• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்லில் பெண்களுக்கு விடப்படும் இலவச பேருந்துகளில்..,
கட்டணம் வசூலிப்பதாக புகார்..!

Byவிஷா

Mar 30, 2023

திண்டுக்கல் ரயில்வே நிலையத்திற்கு அதிகாலை நேரத்தில், தமிழக அரசு பெண்களுக்கு விடப்படும் இலவச பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து புகார் எழுந்திருக்கிறது.
திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு முறையான பேருந்து வசதி இல்லாததாலும், இரவு நேரத்தில் ரயில் பயணம் செய்பவர்கள் வேறு வழியின்றி ஆட்டோ மற்றும் கார்களை நம்பி வீடு திரும்ப வேண்டிய இருப்பதாலும், அவர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாலும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்திற்கு செல்வதற்காக தமிழ்நாடு அரசு பேருந்து பயணித்தது. இந்தப் பேருந்தில் கட்டணம் பெறப்பட்டது. பெண்களுக்கு இலவசம்தானே என்று ஒரு பெண்மணி கேட்டபோது, அதற்கு நடத்துனர் அதிகாலையில் கட்டணம் வசூலிக்கப்படும் என கூறி பணம் வசூலித்துக்கொண்டார். பெண்களுக்கு இலவச பஸ் திட்டத்தில் நேர கால அளவீடுகள் ஏதேனும் உள்ளதா, இது நடத்துனர் வேலையா என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தது மட்டும் இல்லாமல் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு புகார் அளித்துள்ளனர்.