மாற்றுத்திறனாளி பெண் பூங்கொடிக்கு செயற்கை கால் இலவசமாக பொருத்தப்பட்டது.
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா கள்ளிப்பட்டியில் பாண்டியன் மனைவி மாற்றுத்திறனாளி பூங்கொடி உடல்நலக் குறைவால் இடதுகால் இழந்து, தாது மூத்த மகன் பாண்டியராஜன் (25) மாற்றுத்திறனாளியுடன் வாழ்ந்து வருகிறார். தேனீக்கள் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினை தொடர்பு கொண்டு செயற்கைக் கால் பொருத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து தேனீக்கள் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் சார்பாக செயற்கை கால் இலவசமாக பொருத்தப்பட்டது. இதற்கான முழு செலவையும் தேனீக்கள் மாற்றுத்திறனாளி அமைப்பு ஏற்றுக்கொண்டது.
செயற்கைகால் பொருத்தியவுடன் பூங்கொடி அம்மா கூறியதாவது..,
எனது வாழ்க்கை இவ்வளவு தான் இனி நான் நடக்க முடியாது என மன கலக்கத்துடன் கடந்த 2 ஆண்டுகாளாக வாழ்ந்து கொண்டிருந்தார். செயற்கை கால் பொருத்தி நடக்க வைத்து அழகு பார்த்த தேனீக்கள் அறக்கட்டளை அமைப்பிற்கும் மற்றும் நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொண்டார்.
தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வேண்டுமென்றால் தேனீக்கள் அறக்கட்டளை தொடர்பு கொண்டால், உடனடியாக அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனீக்கள் அறக்கட்டளை சார்பில் பெட்டிக்கடை, தையல் மிஷின், அயன் பாக்ஸ், மாற்றுத்திறனாளிகளுக்கு கைவண்டி, பழக்கடை, கூடை பின்ன தேவையான உபகரணங்கள் மருத்துவ உதவிகள் , வயதானவர்களுக்கு தேவையான உதவிகள், கல்வி உதவித்தொகை, இதய அறுவை சிகிச்சை தேவையான உதவிகள், தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், இதுபோல் நலிவடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ முன் வர வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிகழ்வில் தேனீக்கள் அறக்கட்டளை நிர்வாகிகள், அழகேசன், ரஞ்சித்குமார், போட்டோபாண்டி, ஆகியோர் கலந்து கொண்டனர்.