• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மோசடி மன்னன் கங்காதரன் கைது..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்றல் நகர் பகுதியில் வசித்து வரக்கூடியவர் சங்கரநாராயணன் மகன் கங்காதரன் வயது 48 இவர் தமிழ்நாடு ஆந்திரா கேரளா கர்நாடகா பாண்டிச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் தான் நடத்தி வரக்கூடிய மரக்கார் பிரியாணி கடையின் கிளை உரிமம் தருவதாக கூறி 240 நபர்களிடம் சுமார் 25 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார் தொடர்ந்து பிரியாணி கடைகளுக்கான கிளை உரிமம் வழங்காமலும் பணம் கேட்டால் போன் எடுக்காமலும் இருந்த நிலையில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நீதிமன்றத்தின் நாடியும் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு 200க்கும் மேற்பட்டோர் இராஜபாளையம் நீதிமன்றத்தில் கூடி தங்களுக்கு நீதி வேண்டி புகார் அளித்தனர் இந்த நிலையில் இவரை இராஜபாளையம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருவதை அறிந்த மோசடி மன்னன் கங்காதரன் நீதிமன்றத்திற்கு சென்று தன்னை இராஜபாளையம் போலீசார் துன்புறுத்துவதாகவும் ஆகையால் என் மீது நடவடிக்கை எடுக்கக் கூடதாது என நீதிமன்றத்தில் ஸ்டே ஆர்டர் வாங்கி தலைமுறைவாக இருந்த நிலையில் , விருதுநகர் மாவட்டம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பல இடங்களில் தேடி வந்த நிலையில் இன்று இராஜபாளையத்தில் வைத்து மோசடி மன்னன் கங்காதரனை விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் இவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்க முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தனர்.