• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரையில் பிரபல பீடி தயாரிப்பு கம்பெனியின் பெயரில் மோசடி!..

Byகுமார்

Oct 13, 2021

மதுரையில் செனாய் டிரேடர்ஸ் மூலம் பீடிகளை உற்பத்தி செய்து மதுரை மாநகர் பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் மங்களூர் கணேஷ் பீடி நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றிவரும் அவினாஷ் பரமேஸ்வர் நாயக் என்பவர், தங்களது தயாரிப்பு பீடிகள் தத்தனேரி, செல்லூர் பகுதிகளில் தங்களது நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி போலியாக பீடிகளை தயாரித்து சிலர் விற்பனை செய்துவருவதாக புகார் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து மதுரை செல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மதுரை தத்தனேரி பகுதியை சேர்ந்த முத்துச்செல்வம் என்பவர் போலி பீடிகளை தயாரித்து அப்பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரியவர, மதுரை செல்லூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து முத்துச்செல்வம் பதுக்கி வைத்திருந்த போலி பீடி கட்டுகளை போலீசார் கைப்பற்றினர்.