• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஏழை, எளிய மக்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து சொத்துக்களை பத்திர பதிவு செய்து மோசடி…

ByJeisriRam

Sep 26, 2024

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, கோம்பை, மீனாட்சிபுரம் பண்ணைப்புரம், தேவாரம், ஓபுலபுரம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த ஏழை, எளிய அப்பாவி மக்களுக்கு வட்டிக்கு பணம் வாங்கினர்.

வட்டிக்கு வாங்கிய பணம் மற்றும் வட்டியை செலுத்திய பின்னரும் சொத்துக்களை மீட்க முடியாமல் தவிக்கும் அவலம்.

வட்டிக்கு பணம் வாங்கியவர்கள் அசல் மற்றும் வட்டி படம் செலுத்திய பின்னரும் அவர்களுடைய சொத்துகளின் பத்திரப்பதிவை ரத்து செய்து கொடுக்காமல் ஏமாற்றி வருகின்றனர்.

வட்டிக்கு பணம் கொடுத்து மோசடி செய்த பால்தாய் , சுருளி, ரங்கராஜ் கௌசல்யா, விமலாதேவி உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சித்தலைவர், மற்றும் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் புகார் தெரிவிக்கப்பட்டது.

தற்பொழுது உரிய நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் வட்டிக்கு பணம் வாங்கி சொத்துக்களையும் மற்றும் நகைகளையும் இழந்து மீட்க முடியாமல் தவிக்கும் அப்பாவி ஏழை எளிய மக்கள் தவித்து வருகின்றனர்.

இது குறித்து இன்று கோம்பை காவல் நிலையத்தில் விசாரணை நடத்திய சார்பு ஆய்வாளர், பாதிக்கப்பட்ட மக்களிடம் நீதிமன்றத்தின் மூலமே தீர்வு காண முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

இதனால் சொத்துக்களை இழந்த அப்பாவி மக்கள் செய்வது அறியாது தவித்து வருகின்றனர்.