சிவகங்கை மாவட்டம் அரவக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அக்கினி ராஜ் சட்டக்கல்லூரி மாணவரான இவர் சிவகங்கையைச் சேர்ந்த மைனர் மணி கொலை வழக்கில்,9 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் ஜாமீனில் வெளிவந்த அவரை மைனர் மணியின் கூட்டாளிகள் வெட்டி கொலை செய்தனர். தொடர்ந்து அக்னிராஜ் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சேர்ந்து அக்னி பிரதர்ஸ் என்ற குழுவை ஆரம்பித்து அக்கினி ராஜ் கொலையில் சம்மதப்பட்ட பரமசிவம், ஆகாஷ், அழகு பாண்டி ஆகிய மூன்று பேரின் தலையை சிதைத்து கொலை செய்தனர், தொடர்ந்து அக்னி ராஜ் கொலையில் சம்மதப்பட்ட வினோத் கண்ணன் ஆந்திராவில் இருப்பதை தெரிந்து கொண்ட அக்னி பிரதர்ஸ் குழுவினர் வினோத் கண்ணனின் நண்பர்களான பல்லடம் பகுதியில் பேக்கரி ஒன்றில் வேலை செய்து வந்த பிரபுதேவா மற்றும் சாமிநாதன் ஆகியோர் உதவியுடன் வினோத் கண்ணனை வரவழைத்து பல்லடம் அருகே உள்ள கரையான் புதூர் பகுதியில் வைத்து அக்னி ராஜ் பிரதர்ஸ் குழுவைச் சேர்ந்த நபர்கள் சிலர் தலையை சிதைத்து கையை துண்டித்து கொலை செய்தனர். பல்லடம் டிஎஸ்பி வெற்றி செல்வன் தலைமையிலான போலீசார் இது தொடர்பாக மூன்று தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வினோத் கண்ணன் கொலை வழக்கில் தொடர்புடைய காளீஸ்வரன், நிதீஷ் குமார், மற்றும் வினோத் கண்ணனை ஆந்திராவில் இருந்து வரவழைத்த அவரது நண்பர்கள் ஆன பிரபுதேவா மற்றும் சாமிநாதன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். இந்த நிலையில் தற்போது கொலை சம்பவத்தில் தொடர்புடைய அக்கினி ராஜின் தந்தை தங்கமணி மற்றும் அஜய் தேவன், சுரேஷ் ஆகியோர் மூன்று பேர் பல்லடம் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் அவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ஒரு பட்டாக்கத்தி ஒன்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.