• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீயில் கருகி உயிரிழப்பு!…

By

Aug 21, 2021

பழனி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி வத்தக்கவுண்டன் வலசுவில் ஒரே குடும்பத்தில் 4 பேர் கருகிய நிலையில் தீயிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.ஒரே குடும்பத்தை சேர்ந்த முருகேஷன், மனைவி வளர்மதி, மகள் சிவரஞ்சனி, மகன் கார்த்தி நான்கு பேர் வைக்கோல் படப்பிற்குள் இருந்து கருகிய நிலையில் மீட்கப்பட்டுனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விவசாயி முருகேசன் குடும்பத்துடன் கொல்லப்பட்டாரா? அல்லது நான்கு பேரும் வைக்கோல் படப்பிற்கு தீ வைத்து தீக்குள் இறங்கி தற்கொலை செய்துகொண்டனரா? என்று விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே இதை சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகே 4 பேரும் எப்படி இறந்தனர் என்ற தகவல் கிடைக்கும் என திண்டுக்கல் எஸ்பி சீனிவாசன் கூறியுள்ளார். விவசாயி முருகேசன் வீட்டில் எந்த பொருட்களும் திருடு போகவில்லை , சந்தேக மரணம் என வழக்கு பதியப் படுகிறது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.