செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையார் மலை ஒன்றியத்துக்கு உட்பட்ட முடிச்சூர் ஊராட்சி 11,6வது வார்டு பகுதியில் பொதுமக்கள் கோரிக்கை ஏற்று ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டக்கூறு நிதியில் கீழ் 5கோடியே 35 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் வாய் திட்டத்துடன் இணைந்த சிமெண்ட் சாலை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா அவர்கள் கலந்து கொண்டு மழை நீர் வடிகால்வாய் திட்டத்துடன் இணைந்த சிமெண்ட் சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவில் முடிச்சூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விநாயகமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன், வட்டச் செயலாளர் புனிதா ராஜா, உறுப்பினர்கள் மணிகண்டன், சுனில் மேத்யூ, முடிச்சூர் கிளைச் செயலாளர் வாசுதேவன், பொதுமக்கள் என ஏராளமான உடன் கலந்து கொண்டனர்.
 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)