தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசை ஊராட்சி கே.ஆர்.காலனி 5 மற்றும் 7-வது வார்டு சாலைகளுக்கு, தென்காசி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கவும், ரூ.12 லட்சம் மதிப்பில் புதிதாக நியாய விலை கடை கட்டுவதற்குமான அடிக்கல் நாட்டுவிழா, மாவட்ட கழக செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி தலைவி தமிழ்ச்செல்வி , மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் அழகுசுந்தரம். திமுக பிரமுகர் பாலகிருஷ்ணன், மாவட்ட குற்றவியல் நீதிமன்ற அரசு கூடுதல் வழக்கறிஞர் வேலுச்சாமி சீவநல்லூர் சாமிதுரை, குத்துகல்வலசை பஞ்சாயத்து தலைவர் சத்தியராஜ், குத்துகல்வலசை முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முருகேசன், மேலகரம் பேரூர் கழகச் செயலாளர் சுடலை இலஞ்சி, பேரூர் கழக செயலாளர் முத்தையா, குற்றாலம் வழக்கறிஞர் கே.ஆர்.குமார் பாண்டியன், குற்றாலம் வீட்டு வசதி வாரியம் சங்க தலைவர் சுரேஷ், குத்துக்கல்வலசை கிளைச் செயலாளர் காசிகிருஷ்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.