• Sat. Apr 27th, 2024

ராஜபாளையத்தில் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல்

ByKalamegam Viswanathan

Apr 27, 2023

ராஜபாளையம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் 227 படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினர்…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் 227 படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினர் – மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், தென்காசி எம்பி தனுஷ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.


பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,தமிழகத்தில் கடந்த ஆட்சியில் 18 அரசு தலைமை மருத்துவமனைகள் தான் இருந்தது என்றும் தற்போது 2286 ஆரம்ப சுகாதார நிலையமும் 8713 துணை சுகாதார நிலையங்களும் 200 வட்டார சுகாதார நிலையங்களும் உள்ளன என்றும் இந்நிலையில் தமிழகத்தில் ரூ.1038 கோடி மதிப்பீட்டில் புதிதாக 25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டப்பட்டு வருதாகவும் இதனால் பொதுமக்களின் ஒட்டுமொத்த மருத்துவ தேவையை பூர்த்தி செய்ய முடியும் என நம்பிக்கை தெரிவித்தார். விருதுநகர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை தவிர அருப்புக்கோட்டை மற்றும் ராஜபாளையத்தில் அரசு தலைமை மருத்துவமனையை உருவாக்க காரணம் இம்மாவட்டதில் 90 % உழைக்கும் மக்கள் வாழந்து வருவதாகவும் இதை கருத்தில் கொண்டுதான் தமிழக முதல்வர் அனுமதி வழங்கினார் என்றும் தெரிவித்தார்.6 தளங்களுடன் பல்வேறு மருத்துவ வசதிகளுடன் அரசு தலைமை மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுதும் 508 படுக்கை வசதிகளுடன் இம்மருத்துவமனை சிறப்பாக செயல்படும் என்றார்.நிகழ்ச்சியின் நிறைவில் மருத்துவம் சார்ந்த பல்வேறு நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு அமைச்சர் பெருமக்கள் வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *