• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி மாவட்டம் தெற்கு பகவதிபுரத்தில் அங்கன்வாடி கட்டிடத்திற்கு  அடிக்கல்

தெற்கு பகவதிபுரத்தில் அங்கன்வாடி கட்டிடத்திற்கு  விஜய் வசந்த் எம்.பி, அன்ட்ரூஸ் மணி அடிக்கல் நாட்டினர் 
அஞ்சு கிராமம் பகுதியில் அழகப்பபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட தெற்கு பகுதிபுரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் 14.5 லட்சம் செலவில அங்கன்வாடி கட்டிடம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கி உள்ளார். இதனை அடுத்து சுமார் 60 வருடங்களுக்கு முன்னதாக கட்டப்பட்டு, பழுதடைந்த கட்டிடம் இடிக்கப்பட்டு, புதிய அங்கன்வாடி கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அழகப்பபுரம் பேரூராட்சி துணைத்தலைவர் ஆண்ட்ரூஸ் மணி தலைமையில் நடந்தது.

காங்கிரஸ் அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார தலைவர் கால பெருமாள், அழகப்பபுரம் 1வது வார்டு கவுன்சிலர் ராதா  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில்  விஜய் வசந்த் எம் பி,அழகப்பபுரம் பேரூராட்சி துணை தலைவர் அண்ட்ரூஸ் மணி ஆகியோர் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலக உதவி செயல் பொறியாளர் மாரிமுத்து, பேரூராட்சிகள் இளநிலை பொறியாளர் கமால், அகஸ்தீஸ்வரம் கிழக்கு வட்டார தலைவர் வழக்கறிஞர் சாம் ஆகியோர் பங்கேற்றனர்.