• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பாஜக, அதிமுக கட்சிகள் மீது முன்னாள் ஒன்றிய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கடும் விமர்சனம்…

BySeenu

Sep 22, 2024

ஒரே நாடு ஒரே தேர்தலில் பா.ஜ.க. ஏதோ சதி செய்கின்றதோ?! நாடாளுமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் இல்லை …! முதுக்கு தண்டு வளைந்ததனால் (பாஜகவிடம் அதிமுக பனிந்ததனை) நிமிர முடியவில்லை.

பாஜகவிடம் அடிமையாக வைத்திருந்தார் எடப்பாடி பழனிச்சாமி.

அதிமுக மிக கஷ்டமான காலத்தில் உள்ளதாகவும், முதுகு தண்டு வளைந்துள்ளதால் தான் அவர்களால் நிமிர முடியவில்லை என்றும், கட்சியை பாஜகவிடமும் அடிமையாக்க வைத்திருந்ததே எடப்பாடி பழனிச்சாமி செய்த மிகப்பெரிய தவறு என நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் விமர்சனம் செய்துள்ளார். கோவையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில், திமுகவின் விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் முத்துசாமி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன்.

கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்போ அல்லது ஜாதி வாரி கணக்கெடுப்போ நடத்தவில்லை. ஆனால் பல நாடுகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திவிட்டார்கள்.
ஆனாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு, ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த திட்டமிடுவதாகவும், இப்போது தான் காஷ்மீருக்கே தேர்தல் நடத்துகிறார்கள்.
இதன் மூலம் பாஜக அரசு ஏதோ சதி செய்கிறதோ என்பதாக தான் தோன்றுகிறது என அவர் குற்றம்சாட்டினார். குறிப்பாக ஒரே நாடு ஒரே தேர்தலில் பல குழப்பங்கள் உள்ளதாகவும், இதில் எழும் சந்தேகங்கள் குறித்து கேள்வி கேட்டால் பதில் ஏதுமில்லை எனவும் அவர் தெரிவித்தார். மக்கள் தங்களது பிரச்சனையை சொன்னால் பாஜக அரசு அதை திசை திருப்புவதாகவும் உதாரணம் அன்னபூர்ணா விவகாரம் தான் என தெரிவித்த அவர், அன்னபூர்னாவிவாகரத்தில் கோவை மக்களை மிரட்டுகிறார்களோ என்று தோன்றுவதாகவும், நிர்மலா சீத்தாராமன் அவர்கள் வடமாநிலத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் ஒருவர் ஹிந்தி மொழி மூலம் பேசி கேள்வி கேட்டால் அவர்களுக்கு மரியாதை கொடுக்கிறார்கள்.
ஆனால் இங்கு ஒருவர் தமிழில் பேசி கேள்வி கேட்டால் மரியாதை கொடுப்பதில்லை. எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
குறிப்பாக மக்கள் பிரச்சனை பேசினால் நான் வெங்காயம் சாப்பிடவில்லை என்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார். மெடிஷன் படிப்பது என்றால் சம்ஸ்கிருதம் தெரிய வேண்டும் என்கிறார்கள்.

நீட் தேர்வில் நடந்த முறைகேட்டில் அந்ததுறை அமைச்சர் ராஜீனாமா செய்தாரா ?
என கேள்வி எழுப்பிய அவர் ,நீட் தேர்வில் பல முறைகேடு நடப்பதாகவும்
தமிழ்நாட்டில் உள்ள மக்களை அண்ணா , கலைஞர் , பெரியார் ஆகியோர் படிக்க வைத்துவிட்டார்கள்.அதனால் தான் இவ்வளவு கேள்வி கேட்கிறார்கள் எனவும் தயாநிதி மாறன் தெரிவித்தார். மோடி இந்தியாவில் இருப்பதே குறைவு.வெளிநாடுகளில் மட்டும் இருக்கிறார் என்று மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த தயாநிதி மாறன், மதத்தை வைத்தே தொடர்ந்து பாஜக அரசியல் செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அதிமுக மிக கஷ்டமான காலத்தில் உள்ளதாகவும்
முதுகு தண்டு வளைந்துள்ளதால் தான் அவர்களால் நிமிர முடியவில்லை எனவும்,
கட்சியை பாஜகவிடமும் அடிமையாக்க வைத்திருந்ததே எடப்பாடி பழனிச்சாமி செய்த மிகப்பெரிய தவறு எனவும் தயாநிதி மாறன் விமர்சனம் செய்தார். அதிமுகவின் வைத்திலியங்கம் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு பதிவு செய்தது குறித்து ஒபிஎஸ் கூறிய கருத்துக்கு பதிலளித்த தயாநிதி மாறன்,
ஒன்றாக ஆட்சி செய்யும் போது பணம் வாங்கிய போதும் தெரியாதா எனவும் அவர் தெரிவித்தார்.