திருப்பணிகளுக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நன்கொடை விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள போஸ் காலனியில் ஸ்ரீ வெற்றி விநாயகர் கோவில் உள்ளது. கோவிலில் ஸ்ரீ முத்துமாரியம்மன், முன்னோடி கருப்புசாமி,உள்பட பரிவார தெய்வங்கள் உள்ளன.

இங்கு கோவிலை புணரமைப்பதற்கான திருப்பணி வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன .கோவில் கமிட்டி சார்பில் கோவில் திருப்பணி வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் நன்கொடை வழங்குமாறு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று கோவில் திருப்பணி வேலைகளுக்கு ரூபாய் 2 லட்சம் நன்கொடை வழங்கினார்.
கோவில் திருப்பணி குழுவினர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நன்றி தெரிவித்து கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.