விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், கொம்மாந்தபுரத்தில் இந்து நாடார் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட, அருள்மிகு ஸ்ரீபத்திரகாளியம்மன் திருக்கோவிலில் மஹாகும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, விருதுநகர் அதிமுக மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி 1 இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
