• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ சாமி தரிசனம்.

ByM.maniraj

May 3, 2022

கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடைவரை கோயிலில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்எல்ஏ வுமான கடம்பூர் ராஜூ சாமி தரிசனம் செய்தார்.
உலக நன்மைக்காகவும், அதிமுக கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நலமுடன் வாழ வேண்டியும், பருவமழை பெய்து விவசாயங்கள் செழிக்கவும் சிறப்பு வழிபாடு நடந்தது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் கழுகுமலை ஆறுமுகம் நகரில் வசித்து வரும் சுகாதார துறை அதிகாரி கணேசனின் மகளுக்கு திருமணம் நடக்க இருப்பதால் அவரின் இல்லத்திற்கு சென்று மணமகளை எம்எல்ஏ கடம்பூர் ராஜூ வாழ்த்தினார். இதில் கழுகுமலை ‌அதிமுக நகர செயலாளர் முத்துராஜ், நகர இளைஞரணி செயலாளர் கருப்பசாமி, தகவல் தொழில் நுட்ப பிரிவு ஸ்ரீதர், மாவட்ட அம்மா பேரவை அவைத்தலைவர் மாரியப்பன், வர்த்தக பிரிவு தலைவர் காமராஜ், செட்டிகுறிச்சி கிருஷ்ணசாமி, அவைத்தலைவர் காளிமுத்து, பொருளாளர் சுந்தரப்பன், வள்ளிநாயகபுரம் கிளை செயலாளர் பாலமுருகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், வார்டு செயலாளர்கள் மன்மதராஜன், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.