திருத்தங்கல் அருகே கோவில் திருப்பணிக்கு ஒரு லட்சம் ரூபாய் முன்னாள் அமைச்சர் கே. டி .ராஜேந்திர பாலாஜி நிதி வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருத்தங்கல் மேற்கு எம்ஜிஆர் நகர் வடக்கு தெருவில் கண்ணகி காலனி அமைந்துள்ளது. இங்கே வெற்றி விநாயகர் கோவிலில் மாரியம்மன், கருப்பசாமி, உள்ளிட்ட பரிகார தேவதைகள் மற்றும் கோவில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. கோவில் கட்டுமான பணிக்கு நிதி வழங்க வேண்டுமென திருப்பணி குழு கமிட்டி சார்பில் முன்னாள் அமைச்சரும் விருதுநகர் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே. டி. ராஜேந்திர பாலாஜியிடம் கோரிக்கை விடுத்தனர்.

முன்னாள் அமைச்சர் கே. டி .ராஜேந்திர பாலாஜி திருப்பணி வேலைகள் சிறப்பாக அமைய ரூபாய் ஒரு லட்சம் நிதி வழங்கினார். கோவில் திருப்பணி வேலைகளை சிறப்பாக செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
நிதி வழங்கிய முன்னாள் அமைச்சர் கே. டி .ராஜேந்திர பாலாஜிக்கு திருப்பணி குழு கமிட்டியினர் நன்றி தெரிவித்தனர்
