விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் ஆலாவூரணியில் முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக மூன்றாவது வட்டக் கழகம் மற்றும் பிரண்ட்ஸ் பிரதர்ஸ் கிரிக்கெட் அணி இணைந்து கிரிக்கெட் திருவிழா வரும் 30ஆம் தேதி ஆலாவூரணியில்உள்ள கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது.

இதற்கான நிகழ்ச்சிக்கு முன்னால் அமைச்சரும் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே .டி. ராஜேந்திர பாலாஜி கலந்துகொள்ள வருகை தருமாறு ஆலாவூரணி கிராம மக்கள் மற்றும் கிரிக்கெட் அணியினர் அழைப்பு விடுத்தனர் .அதனை ஏற்று நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக முன்னாள் அமைச்சர் கே. டி .ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். மேலும் கிரிக்கெட் போட்டியை சிறப்பாக நடத்த ரூபாய் ஒரு லட்சம் நன்கொடை கொடுத்தார் .அதற்கு கிரிக்கெட் அணியினர் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.