விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுக்ரவார்பட்டி மேலத் தெருவை சேர்ந்த ராஜலட்சுமி. இவர் கணவர் சமீபத்தில் இறந்ததால் மகள்களை படிக்க வைக்க முடியாமல் சிரமப்படுவதாக தகவல் அறிந்து அவர்கள் குடும்பத்திற்கு மாணவிகள் காவியா ஸ்ரீ, கவி ரஞ்சனி, சஷ்டிகா ஸ்ரீ ஆகியோரிடம் ரூபாய் 25000 நிதி வழங்கினார்.

மேலும் மாணவிகளின் மேல் படிப்பு செலவையும் முன்னாள் அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜி ஏற்றுக்கொண்டார். சிவகாசி மாமன்ற உறுப்பினர் சரவண பாண்டியன், ஆனையூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் லட்சுமி நாராயணன், பிலிப்பாசு உள்ளிட்ட அதிமுகவினர் உடன் இருந்தனர்.