அஇஅதிமுக ஆட்சி காலத்தில் குடிதண்ணீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என இளையான்குடியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பேசினார்.
மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இளையான்குடியில் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் 108 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் இளையான்குடி ஒன்றியச் செயலாளர் பாரதிராஜா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், அஇஅதிமுக ஆட்சி காலத்தில் குடிதண்ணீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் காவிரி, குண்டாறு நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தப்பட்டது. பொதுமக்கள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை எளிதில் சந்தித்து தங்களது பிரச்சினைகளை தெரிவித்து தீர்வு கண்டனர். தற்போதைய ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்களை பொதுமக்கள் பார்க்க முடியாத அவலநிலையில் இருக்கின்றனர் என்று பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் எம். எல். ஏ முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நாகராஜன், குணசேகரன், மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் இளங்கோவன், கருணாகரன், நகர செயலாளர் நாகூர் மீரா, மாவட்ட கவுன்சிலர் மகேஸ்வரி செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் கே.எம்.கோபி, சேர்மன் முணியான்டி, ஒன்றிய கவுன்சிலர் சீமைச்சாமி மற்றும் மாவட்ட ஒன்றிய நகர, கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.