• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

பூத் ஏஜென்ட்கள் களஆய்வுப் பணி மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் பாஸ்கர் …

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஒன்றிய பகுதிகளில் 2026 தேர்தல் கள பணிகளை தீவிர படுத்த அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கர் மற்றும் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் சாத்தூர் தெற்கு ஒன்றியம் குருசாமி ஆகியோர் பூத் ஏஜென்டுகளுக்கான கள ஆய்வுப் பணியை மேற்கொண்டனர்..

கள ஆய்வு பணிக்கு முன்னர் சாத்தூர் அருகில் உள்ள பெரிய ஓடைப்பட்டி வன்னி விநாயகர் கோவிலில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று வன்னி விநாயகரை வேண்டி சிறப்பு பூஜைகள் செய்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.

பின்னர் சாத்தூர் தெற்கு
ஒன்றிய கிராமங்களான பெரிய ஓடைப்பட்டி, பெத்துரெட்டிபட்டி, நல்லி, முள்ளிச்செவல், போத்திரெட்டிபட்டி, உள்ளிட்ட சாத்தூர் தெற்கு ஒன்றிய கிராமங்களில் பூத் ஏஜெண்டுகளுக்கான கள ஆய்வுப் பணியை அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கர் நேரில் சென்று மேற்கொண்டார்.

சாத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் குருசாமி முன்னிலையில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் முன்னாள் அமைச்சர் பாஸ்கர் ஒவ்வொரு கிராமங்களாக நேரில் சென்று பூத் ஏஜெண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள நபர்களை நேரில் சந்தித்து ஆய்வு மேற்கொண்டார்.

வாக்கு வங்கிகளை அதிகரிக்கச் செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் வீடுகள் தோறும் பிரச்சாரம் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் அதிகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்கினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பூத் ஏஜெண்டுகளுக்கு சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக சாத்தூர் நகர ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.