• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்கீடு

ByP.Thangapandi

Feb 14, 2024

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்கீடு செய்தமைக்கு அதிமுக கட்சி நிர்வாகிகள் செல்லம்பட்டியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்சியை வெளிப்படுத்தினர்.

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சரும் மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளரும் எதிர்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்கீடு செய்தமைக்கு அதிமுக வினர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அதிமுக மாவட்ட மாணவரணிச் செயலாளர் மகேந்திரபாண்டி தலைமையில் கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்.

இதில் கட்சி நிர்வாகி பரமன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.