மதுரை மாவட்டம் சோழவந்தான் அடுத்து முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மதுரை புறநகர் வடக்கு மாவட்ட விவசாய அணி முன்னாள் மாவட்ட செயலாளர் முல்லை சக்தி என்ற ஷேக்ஸ்பியர் தாய் கழகமான அதிமுகவில் இன்று இணைந்தார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கொரியர் கணேசன் அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். தொடர்ந்து வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் முள்ளி பள்ளம் கிளைக் கழகத்தில் அதிகமான வாக்குகளை பெற்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு பாடுபடுவதாகவும் தலைமைக்கு விசுவாசம் மிக்க தொண்டனாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் அனுமதி பெற்று முள்ளி பள்ளம் ஊராட்சியில் திமுக ஆட்சி அவலங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறி அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி தர பாடுபடுவதாக கூறினார்.










