மேகமலை, ஹைவேஸ் உள்ளிட்ட ஏழுமலை கிராமங்களில் இடிந்து விழும் நிலையில், உள்ள வீடுகளை பராமரிப்பு செய்ய தேவையான தளவாடப் பொருட்கள் எடுத்துச் செல்ல வனத்துறை தடை விதிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா, மேகமலை, ஹைவேஸ், மணலார், அப்பர் மணலார், வெண்ணியர், மகாராஜா மெட்டு, இரவங்கலார் உள்ளிட்ட ஏழுமலை கிராமங்கள் 3000 வீடுகள் அமைந்துள்ளது.


இந்த ஏழுமலை கிராமங்களுக்கு தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி இருந்து மகாராஜா மெட்டு வடை 48.3 கிலோ மீட்டர் பட்டா நில சாலையாக இருந்தது.
இந்த பட்டா சாலையாக இருந்ததை வருவாய் துறையாக தமிழக அரசு மாற்றிவிட்டது.
இங்கு வசிக்க கூடிய மக்கள் தங்களுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்கள், தேவையான சாமான்கள் அனைத்தும் சின்னமனூரில் இருந்து வாங்கி பேருந்துகள், வாகனங்களில் கொண்டு சென்று வந்தனர்.


இந்த நிலையில் தற்போது இந்த பகுதியை ஸ்ரீவில்லிபுத்தூர் வன புலிகள் சரணாலயமாக மாற்றி விட்டதாக கூறி வனத்துறையினர் வீடுகளுக்கு தேவையான பொருட்கள் எடுத்துச் செல்ல தென்பழனியில் வனத்துறை சோதனை சாவடி அமைத்து தொடர்ந்து தடை விதித்து வருகின்றனர்.


இதனால் இந்த பகுதியில் உள்ள சுமார் 3000 வீடுகளும் தற்பொழுது பழுதடைத்து, பால் அடைந்து, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு தேவையான வீட்டு உபயோக தளவாடப் பொருள்கள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

\