
ரோமானியா நாட்டைச் சேர்ந்த ஸ்டீபன் நெகோய்டா என்பவர் எந்த ஒரு வெளிநாட்டிற்கு பயணம் சென்றாலும் அங்கு வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கையை அறிந்து கொள்வதற்காக பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்தில் செல்வதை வழக்கமாக கொண்டவர்.
கோவையில் இதுபோல் பேருந்தில் பயணம் மேற்கொண்ட இவர், பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்வதைக் கண்டு ஆச்சரியம் அடைந்து இங்குள்ள தனது நண்பரிடம் இதுகுறித்து விசாரித்துள்ளார். திமுக அரசின் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயண திட்டம் குறித்து அறிந்த ஸ்டீபன் உலகின் முன்னேறிய நாடுகளில் கூட மகளிருக்காக இதுபோன்ற திட்டங்கள் இல்லை என்று கூறியுள்ளார்.இதுபோன்ற மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தும் அரசுக்கு ஆதரவாக தற்போது நடந்துவரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பிரச்சாரம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து கோவை நகரின் பல்வேறு வார்டுகளில் மோட்டார் பைக், பேருந்து ஆகியவற்றில் பயணம் செய்து திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வரும் இவர் இன்று மாலை கோவையில் இருந்து செல்லவிருப்பதாக தெரிகிறது.
தன் வியாபார ரீதியாக பிசினஸ் விசாவில் இந்தியா வந்துள்ள ஒருவர் இங்குள்ள கட்சிக்காக வாக்கு சேகரிப்பது என்பது கோவை மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
