• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

கோவையில் முதன்முறையாக அதிநவீன ‘எம்பரேஸ் RF’ மருத்துவ உபகரணத்தை சிற்பி ஏஸ்தேடிக்ஸ் மருத்துவமனையில் அறிமுகம்..,  

BySeenu

Nov 4, 2023

கோவை அவிநாசி சாலையில் செயல்பட்டுவரும் அழகு மேம்படுத்தலுக்கான அதிநவீன அறுவை சிகிச்சைமையமான சிற்பி ஏஸ்தேடிக்ஸ் எம்பரேஸ் RF (Embrace RF) எனும் அறுவை சிகிச்சை அல்லாத முகம் மற்றும் உடல் வரையறை சாதனத்தை கோவையில் முதன்முறையாக அறிமுகம் செய்துள்ளது.  

இந்த அறிமுக நிகழ்வு சிற்பி ஏஸ்தேடிக்ஸ் மையத்தின் நிறுவனர் டாக்டர் A.R. ஸ்ரீகிரீஷ், ராயல் கேர் மருத்துவமனையின் ரேடியோலஜிஸ்ட் டாக்டர் பி.வீணாசங்கரி, இருவரின் பெற்றோர் மற்றும் முக்கிய மருத்துவ குழுவினருடன் நடைபெற்றது.  

இது குறித்து டாக்டர் A.R. ஸ்ரீகிரீஷ் பேசுகையில், சிற்பி ஏஸ்தேடிக்ஸ் மையத்தில் வழங்கப்படும் சிகிச்சைகளை சிறந்த முறையில் வழங்க உதவும் மருத்துவ உபகரணங்களை நாங்கள் அறிமுகம் செய்து வருகிறோம். அந்த வகையில் கோவையின் முதலாவதும் தமிழ்நாட்டில் நான்காவதுமான எம்பரேஸ் RF கருவியை இங்கு அறிமுகம் செய்வதில் எங்கள் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி,என்றார். 

“பிப்ரவரி 2023 இல் சிற்பி ஏஸ்தேடிக்ஸ் மையத்தை நாங்கள் இங்கு தொடங்கினோம். எங்களுடைய அனுபவம் வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் அதிநவீன உபகரணங்களுடன்,ஆண்,பெண் என இருபாலருக்கும் முகம், மார்பு, உடல், முடி ஆகிய பகுதிகளில் அவர்களுக்கு தேவைப்படும் அழகு மற்றும் தோற்றம் சார்ந்த மாற்றங்களுக்கான சிகிச்சைகளை வழங்கி வருகிறோம். இதனால் அவர்கள் தங்கள் தோற்றம் குறித்து தன்னம்பிக்கையுடன் உணர்கின்றனர்.” என்றார்.  

புதிய Embrace RF கருவி குறித்து அவர் பேசுகையில் கூறியதாவது:-இந்த இயந்திரம் ரேடியோ அலை வரிசையைப் பயன்படுத்தி சருமம்,மார்பு,உடல் பகுதிகளில் வாடிக்கையாளர்கள் கேட்கும் மாற்றத்தை வழங்க உதவும். முகப்பரு தழும்புகளை நீக்குதல்,வயிற்றில் உள்ள நீட்சிக்குறிகள்,கை,வயிறு மற்றும் மார்பு பகுதியில் இறுக்கம்  சிகிச்சை , தோல் சுருக்கம் நீக்குதல் உட்பட பல தீர்வுகளை வழங்க முடியும்.இதை கொண்டு நுண்துளை அறுவை சிகிச்சையும், அறுவை சிகிச்சை அல்லாத தீர்வுகளையும் வழங்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்வில் சிற்பி ஏஸ்தேடிக்ஸ் மையத்தின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.