

வைஷ்ணவா கல்லூரி சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வணிகவியல் துறையில் அதிக மதிப்பெண் பெறுவது குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது.
சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள பதிப்பக செம்மல் அரசு மேல் நிலை பள்ளியில் பனிரென்டாம் வகுப்பு வணிகவியல் துறையில் பயிலும் மாணவர்களுக்கு வைஷ்ணவா கல்லூரியில் பயிலும் மாணவர்கள் ஒன்றிணைந்து வணிகம் மற்றும் நிதி சம்பந்தபட்ட படிப்புகளில் நல்ல மதிப்பெண் பெறுவது குறித்து பள்ளி மாணவர்களிடையே கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து வணிகவியல் துறை மாதிரி வினா அடங்கிய தொகுப்பு புத்தகம் வைஷ்ணவா கல்லூரி மாணவர்கள் சார்பாக இலவசமாக வழங்கப்பட்டது.

அதன் பின்னர் செய்தியளர்களிடம் பேசிய வைஷ்ணவா கல்லுரியின் முதல்வர் முனைவர் சந்தோஷ் பாபு கூறியதாவது..,
அரசு பள்ளியில் உள்ள மாணவர்கள் கல்லுரி படிப்புக்கு முன்னனி கல்லுரிகளில் இடம் கிடைக்க அதிக மதிப்பெண் தேவை அந்த மதிப்பெண் அதிகமா பெறுவது எப்படி என்பது பற்றி தான் இந்த கருத்தரங்கம் என்று கூறினார்.
இந் நிகழ்வின் போது பள்ளியின் தலைமை ஆசிரியர் சக்திவேல், வணிகவியல்-நிதி மற்றும் வருவாய் துறை தலைவர் முனைவர் ரா.பிரேமலதா ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

