• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பெல்ஜியத்தில் கால்பந்து ரசிகர்கள் வன்முறை

கத்தாரில் நடைபெற்று வரும் 2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் குரூப் எப் பிரிவில் நேற்று பலம் வாய்ந்த பெல்ஜியம் அணியை மொராக்கோவை எதிர்க்கொண்டது. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி மொராக்கோ அபார வெற்றிபெற்றது. பெல்ஜியத்தின் தோல்வி கால்பந்து ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மொராக்காவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததால் ஆத்திரமடைந்த பெல்ஜியத்தில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். பெல்ஜியம் தலைநகர் பிரெசில்சில் கால்பந்து ரசிகர்கள் மொரோக்கோ கொடியை தீவைத்து கொழுத்தினர். மேலும், கார்கள், பைக்குகளுக்கு தீ வைத்தும் ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வன்முறையில் ஈடுபட்ட ரசிகர்களை கைது செய்தனர்.