• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சென்னையில் பிரபல திரையரங்கில் உணவு பாதுகாப்புத்துறை சோதனை

Byவிஷா

Mar 4, 2025

சென்னையில் உள்ள ஒரு பிரபல திரையரங்குகளில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி தலைமையிலான குழு மேற்கண்ட திரையரங்கை சோதனையிட்டனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் கூறியதாவது..,
எங்களுக்கு வந்த புகாரைத் தொடர்ந்து நாங்கள் சோதனையிட்டதில், இந்தத் திரையரங்கில் காலாவதியான குளிர்பானங்கள், பாப்கார்ன்கள் கேரளாவில் இருந்து விநியோகம் செய்யப்பட்டுள்ளன. அந்நிறுவனத்துக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த குளிர்பானங்களின் காலாவதி தேதி கடந்த நவம்பர் மாதத்துடன் முடிவடைந்த நிலையிலும், தொடர்ந்து விற்பனை செய்து வந்துள்ளனர்.
இதை யொட்டி கேன்டீன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் சென்னை முழுவதும் உள்ள திரையரங்குகளில் காலாவதியான உணவு பொருட்கள் குறித்து சோதனைகள் மேற்கொள்வதற்காக சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு விரைவில் அனைத்து திரையரங்குகளுக்கும் நேரடியாகச் சென்று சோதனை மேற்கொள்ளவுள்ளது என்று கூறினார்.