வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய திமுக சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தாயில்பட்டியில் அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாண்டியன் தலைமை வகித்தார், ஒன்றிய துணை செயலாளர் சந்தனம், ஒன்றிய அவை தலைவர் திருப்பதி, மாவட்ட பிரதிநிதிகள் பொன்னழகு, முத்துராஜ் ,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மகேஸ்வரன், இளைஞரணி துணை அமைப்பாளர் மணிகண்டன், ஆலங்குளம் கோவிந்தராஜ், முன்னாள் கவுன்சிலர் முருகேசன்,
தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கணேசன், மாணவரணி அமைப்பாளர் சபாபதி, பாண்டீஸ்வரன், விளையாட்டு மேம்பாட்டு அணி மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வெம்பக்கோட்டை ஒன்றிய பொருளாளர் விவேகானந்தன் நன்றி கூறினார்.
வெம்பக்கோட்டையில் உள்ள சிபிஓ ஆதரவற்றோர் உண்டு உரைவிட பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன தொடர்ந்து மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வெம்பக்கோட்டை திமுக கிளைச் செயலாளர் ரவிசங்கர் இளைஞர் அணி சூர்யா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.








