கொடைக்கானலில் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் 28 வது மலர் வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. நூற்றுகணக்கான பக்தர்கள் வழிபாடு, நவதானியங்களை கொண்டு உருவாகிய கடவுளின் படங்களை கண்டு பரவசம் அடைந்தனர்.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான குறிஞ்சி ஆண்டவர் திருக்கோவில் பழனி தண்டாயுதபாணி கோவிலின்
உப கோவிலாக இருந்துவருகிறது. இந்தகோவிலில்முருகபெருமானுக்கு இன்று 28 வது சிறப்புமலர் வழிபாடு நடைபெற்றது.

இதில் பலவகையான வண்ண வண்ண மலர்களால் முருக பெருமானுக்கு வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் பச்சை அரிசியை கொண்டு முருகப்பெருமான் உருவ படம் வரையபட்டிருந்தது.அதே போல் நவதானியங்களை கொண்டு முருகன், விநாயகர், வேல் ஆகிய உருவங்களை கண்டு சுற்றுலா பயணிகள் பரவசம் அடைந்தனர்.
இதனை தொடர்ந்து குறிஞ்சிமலை குமரனுக்கு பல்வேறு அபிஷேங்கள் செய்யப்பட்டு ராஜா அலங்காரத்தில் முருகபெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த மலர் வழிபாட்டினை குறிஞ்சி ஆண்டவர் கோவில் மற்றும் தனியார் ஹோட்டல் சார்பாக இந்த மலர் வழிபாடு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.