• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

பெண்ணை படுகொலை செய்த வழக்கில் மேலும் 2 பேர் கைது..,

திண்டுக்கல், செல்லமந்தாடி ரயில்வேபாலம் கீழே விநாயகா நகர் பகுதியில் சீலப்பாடியை சேர்ந்த மீனாட்சி(25) என்பவர் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக சீலப்பாடியை சேர்ந்த கோபி(26), காளிமுத்து(23) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன், சார்பு ஆய்வாளர்கள் முனியாண்டி, சூரியகலா மற்றும் காவலர்கள் அப்பகுதிகளில் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேலும் மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட கலைமணி(43) வினோத்குமார்(19)ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கார் பைக்கை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.