• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு…

Byமகா

Aug 30, 2022

நாளை விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மதுரை மாட்டுதாவனி மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மதுரை மாவட்டம் மட்டுமல்லாமல் திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.நாளொன்றுக்கு 100 டன் வரை பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் நாளை விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த தினம் என்பதால் பூக்கள் விலை கடுமையாக உயர்த்துள்ளது. அதே நேரத்தில் பூக்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. பூக்கள் வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குவிந்து வருகின்றனர்.

கடந்த வாரம் 500 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த மல்லிகை பூ இன்று சுமார் 3 மடங்கு அதிகரித்து 1800ரூபாய்க்கும், 400 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த பிச்சி பூ 800 ரூபாய்க்கும், 500 ரூபாய்க்கு விற்பனையான முல்லை பூ 1000 ரூபாய்க்கும், கனகாம்பரம் 900 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. சம்பங்கி 400 ரூபாய்க்கும் பட்டன்ரோஸ்250 ரூபாய்க்கும் செண்டு பூ 100ரூபாய்க்கும் செவ்வந்தி பூ 100 ரூபாய்க்கும், அரளி பூ 400 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகின்றன. பூக்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால் பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளதாகவும் தேவைக்கு ஏற்ப பூக்கள் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.