• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உக்ரைன் போர்க்களத்தில் பிறந்த பூ..

Byகாயத்ரி

Feb 26, 2022

ரஷ்யா-உக்ரைன் இரு நாடுகள் இடையே சிறிது காலமாகவே பதற்றம் நீடித்து வந்தது. நேட்டோ படையில் சேரக்கூடாது என பல்வேறு வலியுறுத்தல்களுடன், பதற்றத்துக்கு மத்தியில் உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கியிருக்கிறது ரஷ்யா.

போர்க்களம் உச்சத்தை அடைந்த நிலையில் உக்ரைன் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தப்பியோடி வருகின்றனர். அதாவது உக்ரைனில் எல்லை வீடுகள், கட்டிடங்களிலும் சுரங்க அறை இருப்பது வழக்கம். இரண்டாம் உலகப்போரின் காலத்தில் இருந்து இந்த முறை அங்கு உள்ளது. இந்த நிலையில், பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள சுரங்கத்துக்குள் பதுங்கி தப்பிவருகின்றனர். இந்த நிலையில், கிழக்கு உக்ரைனில் உள்ள நைப்ரோ என்ற இடத்தில் மருத்துவமனைகளில் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கான வார்டு சுரங்க அறைக்கு மாற்றப் பட்டுள்ளது. சுரங்க அறையில் தீவிர சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டு, அங்கு பச்சிளம் குழந்தைகளை செவிலியர்கள் பராமரித்து வருகின்றனர். கீவ்-வில் உள்ள மெட்ரோ சுரங்கப்பாதைகள் தஞ்சமடைந்த 23 வயது பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பெண்ணுடன் இருந்தவர்களே பிரசவம் பார்த்ததை அடுத்து தாயும், குழந்தையும் நலமாக இருக்கின்றனர். மியா என பெயர் சூட்டப்பட்ட அந்த குழந்தையின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.