• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஓணானா ச்ச்சீ…என்று அலறி ஓடும் புளோரிடா மக்கள்

Byகாயத்ரி

Feb 1, 2022

ஓணான்கள் நம் அனைவரையும் பயந்து ஓட வைக்கும் ஒரு விசித்திரமான அறுவெறுக்க தக்க தோற்றம் கொண்ட ஊர்வன வகையை சேர்ந்தவை. இவையெல்லாம் பெரும்பாலும் பாதிப்பில்லாதவை என்பதோடு, அமைதியாக மரங்களில், யாரையும் தொந்தரவு செய்யாமல் தான் வாழ்கின்றன. ஆனால் சாலையில் செல்லும் போது, எதிர்பாரமல் உங்கள் மீது ஓணான்கள் விழுந்தால் எப்படி இருக்கும் கொஞ்சம் நினைத்து பாருங்கள். அலறி தெறித்து ஓட மாட்டீர்கள். புளோரிடாவில் வசிப்பவர்கள் இந்த பிரச்சனையை தான் சந்திக்கிறார்கள்.

ஓணான்கள் போல் தோற்றமுள்ள பேரோந்தி (Iguana) என்பது வெப்ப மண்டலத்தில் வாழும் முதுகெலும்புள்ள ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு பல்லி வகை உயிரினம். இது அமெரிக்காவின் மத்திய பகுதியிலும், தென் அமெரிக்காவின் வட பகுதியிலும் கரிபியத் தீவுகளிலும் இயற்கையாகக் காணப்படுகின்றது. அதிக அளவாக ஏறத்தாழ இரண்டு மீட்டர் நீளத்திற்கு வளரக்கூடியது இந்த பேரோந்தி ஆறு கிலோகிராம் வரை எடை இருக்ககூடியது.புளோரிடாவில் வசிப்பவர்களுக்கு இது ஒரு விசித்திரமான, பிரச்சனை. மாநிலத்தில் வழக்கத்திற்கு மாறான குளிர் அதிகமாக இருப்பாதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக, வல்லுநர்கள் கூறுகின்றனர்.

குளிர்ச்சியான இரத்தம் கொண்ட பேரோந்திகள் வெப்பநிலை குறையும் போது அவை மெதுவாக செல்லும் அல்லது அசையாமல் இருக்கும். குளிரினால், உறைந்து போனதால், அவை மரங்களில் இருந்து விழக்கூடும், ஆனால் அவை இறக்கவில்லை, உறைந்து போயுள்ளன என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். பேரோந்திகளின் உடல்கள் அவற்றின் செயல்பாடுகளை இழக்கும் போது அவை மரங்களின் கிளைகளில் தூங்குகின்றன, மிகவும் குளிராக இருப்பதால், அவற்றி உடல் செயல்பாடுகளை இழப்பதால், மரங்களை பிடித்துக்கொள்ள இயலாமல் மரங்களிலிருந்து கீழே விழுகின்றன.

தற்போது குளிர்கால புயல் அமெரிக்காவின் கிழக்குப் பகுதியைத் தாக்கியுள்ள நிலையில் புளோரிடாவில் மிகவும் குளிர்ந்த வானிலை காணப்படுகிறது. சாலையில் பேரோந்திகள் அதிகம் விழுவதால், வானிலை சேவை இது குறித்து எச்சரிக்கை விடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. புளோரிடாவில் வசிக்கும் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 30, 2022) தனது முற்றத்தில் உறைந்த ஓணான்கள் மிக அதிக அளவில் இருப்பதைக் கண்டதாகக் கூறப்படுகிறது.