
கோவை குற்றால அருவியில் கன மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றனர். புதிய, புதிய கிளை நதிகள், நீரோடைகள் உருவாகி தண்ணீர் பாய்ந்து செல்கிறது.
கோவை குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க 3வது நாளாக தடை நீடிக்கப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டத்தில் கோவை குற்றாலம் அருவி சுற்றுலா தளங்களில் முக்கிய இடத்தில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பெரும்பாலான நாட்களில் தண்ணீர் வரத்து இருக்கும். எனவே கோவை மட்டும் இன்றி பல்வேறு வெளி மாநிலம், வெளி மாவட்டப் பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் கோவை குற்றாலத்திற்கு வந்து, அங்கு உள்ள அறிவியல் ஆனந்தமாக குளித்து மகிழ்ச்சியுடன் திரும்புகின்றனர்.


இதற்கு இடையே மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இந்நிலையில் வனத்துறை ஊழியர்கள் நேற்று முன்தினம் காலை கோவை குற்றாலம் அருவியின் நீர்வரத்து அம்சங்களை பார்வையிடுவதற்காக சென்றனர். அப்பொழுது அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.


கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அறிவியல் குறிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பல்வேறு சிற்று ஓடைகள், கிளை நதிகள் உருவாகி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் கிளை நதிகள், ஓடைகளில் இருந்து தண்ணீர் நொய்யல் ஆற்றில் கலந்து நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், கோவை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குளங்கள், குட்டைகள் நிறைந்து வருகின்றன. இதனால் அப்பகுதி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


