தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில் தேர்தலை அமைதியாகவும் பயமில்லாமலும் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் இன்று அண்ணா சிலையின் துணை ராணுவம் காவல்துறையை இணைந்து கொடி அணிவிப்பு மரியாதை பேரணி நடைபெற்றது. துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்கள் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று அச்சமில்லாமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்*

தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் தமிழ்நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை அண்ணா சிலை பகுதியில் பொதுமக்கள் அச்சமில்லாமல் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த விதத்தில் துணை ராணுவம் மற்றும் காவல் துறையினர் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் அண்ணா சிலையிலிருந்து கொடி அணிவிப்பு பேரணியில் ஈடுபட்டனர்.

இந்த பேரணியில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். அச்சம் இல்லாமல் பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் அண்ணாசாலையில் இருந்து துவங்கிய பேரணியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் கொடி அசைத்து துவக்கி வைத்தார். கீழ ராஜா வீதி
பிருந்தாவனம் பழனியப்பா உள்ளிட்ட வீதிகள் வழியாக பேருந்து நிலையத்தில் கொடி அணிவிப்பு பேரணி முடிவு பெற்றது.



