• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

புனித அலங்கார உபகார மாதா திருத்தல பெருவிழா கொடியேற்றம்..,

இந்தியாவின் தென் கோடி கன்னியாகுமரியில் கடற்கரை பகுதியில் உள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தல தேவாலயா விழா கடந்த (டிசம்பர்_8)ம் நாள் மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழா கொடி ஆலையத்தை சுற்றியுள்ள வீதிகள் வழியாக ஊர்வலமாக தேவாலைய பங்கு தந்தை அருட்பணி உபால்ட் தலைமையில் துணை அருட்பணியாளர்கள், பங்கு பேரவை தலைவர், உறுப்பினர்கள், பக்த சபை அங்கத்தினர்கள், ஊர் பொது மக்கள் என ஊர்வலமாக திருக்கொடி எடுத்து வரப்பட்டு ஆலைய முற்றத்தில் உள்ள கொடி மரத்தில் இயற்றப்பட்டது.

கொடியேற்றம் முடிந்த அடுத்த நொடியில் வண்ண ஜாலம் காட்டிய வான வேடிக்கை பட்டாசுகள் பட்டாம்பூச்சி போல் வண்ண ஜாலத்துடன்,ஒளி உமிழ்ந்த ஓசையுடன் கண் சிமிட்டியது பார்த்தோரை மகிழ்ச்சி அடைய செய்தது.

விழா நாள் முதல் திருப்பலிக்கு பாளையங்கோட்டை மேனாள் ஆயர் மேதகு ஆயர்.ஜூடு பால்ராஜ் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் மறையுரையை சென்னை அடையாறு வேளாங்கண்ணி தேவாலய அருட்பணி கிறிஸ்து ராஜாமணி வழங்கினார்.

தேவாலய வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம், கூட்டமாக பங்கேற்றதில், கிறிஸ்தவர்கள் மட்டுமே இல்லாது பிற மதத்தை சேர்ந்த சகோதர, சகோதிரிகள் பங்கேற்பது.கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தின் சிறப்பு. எதிர் வரும் டிசம்பர் 17_ம் தேதி திருவிழா மாலை 6.மணிக்கு திருக்கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.