• Wed. Jan 22nd, 2025

அன்னை சோனியா காந்தியின், அகவை 77_கொண்டாட்டம்..!

காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர், அன்னை சோனியா காந்தி அவர்களின் 77- வது அகவை விழாவை முன்னிட்டு, காலை 8.30 மணிக்கு, தமிழக காங்கிரஸ் கட்சி சட்டமன்ற துணைத்தலைவர், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ்குமார் தலைமையில் கருங்கல் பேருந்து நிலையத்தின் முன்புறம் வைத்து 77 – கிலோ கேக் வெட்டி அனைவரும் இனிப்பு வழங்கி, கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 37 – நலிந்த ஏழை பெண்களுக்கு தையல் மிஷின்கள் மற்றும் கொடும் நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு நோயாளிகளுக்கு தலா ரூ. 15 ஆயிரம் வீதம் ரூ. 30 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர், குமரி மக்களவை உறுப்பினர் விஜய்வசந்த் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர். மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், வட்டார நிர்வாகிகள், துணை அமைப்புகளின் மாநில, மாவட்ட, வட்டார தலைவர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.