குமரி மாவட்டத்தில் உள்ள இந்து கோவில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த. திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில், பங்குனி மற்றும் ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இவ்வாண்டில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அத்தியற மடம் கோகுல் தந்திரி பூஜைகள் செய்தபின், திருவிழா கொடியை ஏற்றினார்.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் கொடியேற்றத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.