• Fri. Dec 5th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

முருகன் கோவில் தெப்பத்திருவிழா கொடியேற்றம்

Byகுமார்

Jan 30, 2025

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் கோலகலமாக துவக்கம்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

முருகப்பெருமானின் அறு படை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் 10 நாட்கள் தெப் பத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதே போல இந்த ஆண்டு தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து 7-ந் தேதி வரை நடைபெறும் இவ்விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியதையடுத்து, தினமும் காலை தங்க சப்ரத்திலும், இரவு பூதவாகனம், அன்ன வாகனம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக 6-ந் தேதி தைக்கார்த்திகை தினத்தில் தெப்பக்குளத்தில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்வும் தொடர்ந்து 16 கால்மண்ட பம் வளாகத்தில் இருந்து நகரின் முக்கிய ரத வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக வரும் 7-ந்தேதி ஜி.எஸ்.டி ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது. அன்று காலை தெப்ப மிதவையில் முருகப்பெருமான், தெய் வானையுடன் எழுந்தருளி தெப்பகுளத்தை வலம் வந்து அருள் பாலிக்கிறார்.தொடர்ந்து அன்று மாலை தெப்பக்குளத்தில் மைய மண்டபத்தில் பத்தி உலா நிகழ்ச்சியும் தொடர்ந்து மின்னொளியில் மீண்டும் தெப்ப மிதவையில் தெய்வானையுடன் முருகப்பெருமான் தெப்பக்குளத்தை வலம் வந்து அருள் பாலிக்கிறார்.

திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக 7-ந் தேதி இரவு 8 மணியளவில் சன்னதி தெருவில் சொக்கநாதர் கோவில் முன்பு சூரசம்காரம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.