• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சாத்தூர் பகுதியில், கொடி நாள் நிதி திரட்டும் பணிகள்…..

ByKalamegam Viswanathan

Dec 16, 2023

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில், கொடி நாள் நிதி திரட்டும் பணிகள் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது வழக்கம். விருதுநகர் மாவட்டத்தில், கொடி நாள் நிதி திரட்டும் பணிகளை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தொடக்கி வைத்தார். இதனையடுத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், போக்குவரத்துத்துறை மற்றும் ஊர்காவல் படை வீரர்கள் உள்ளிட்ட அமைப்பினர், பொது மக்களிடம் கொடி நாள் நிதி திரட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சாத்தூர் நகர் பகுதி பொது மக்களிடம், ஊர்காவல் படை வீரர்கள் கொடி நாள் நிதி திரட்டினர்.