• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஐந்து காவலர்கள் பணியிடை நீக்கம்..,

BySeenu

Jun 6, 2025

கோவையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட ஐந்து காவலர்களை பணியிட நீக்கம் செய்து காவல் ஆணையர் சரவண சுந்தர் நடவடிக்கை எடுத்தார்.

கோவை மாநகரில் பணியாற்றும் காவல் துறையினர் சிலர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் வந்தது. இது தொடர்பாக காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் முறைகேட்டில் ஈடுபட்டு வரும் காவலர் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

இதில் வடவள்ளி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் மணிகண்டன், செல்வபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் வடிவேலு, போத்தனூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணி புரியும் கபூர், காவலர்கள் வினோத், வெரைட்டிகள் சாலை காவல் நிலைய காவலர் மகாராஜன் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

இதை அடுத்து இவர்கள் ஐந்து பேரையும் பணியிடை நீக்கம் செய்ய மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவிட்டார். இவர்கள் போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபட்ட நபர்களிடம் லஞ்சம் வாங்கியது, சரக்கு வாகனங்களில் பணம் வசூலித்தது, பல்வேறு வழக்குகளில் புகார் தாரர்களிடம் லஞ்சம் தொகை பெற்றது மற்றும் குற்று நடவடிக்கைகள் உடந்தையாக இருந்தது. போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவந்து உள்ளது. இது கோவை மாநகர காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.