• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

பொதுமக்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பறித்த ஐந்து நபர்கள் கைது..,

BySeenu

Jul 15, 2026

whatsapp மற்றும் பேஸ்புக்கில் தொடர்பு கொண்டு பிட்காயின் டிரேடிங் ஆன்லைன் டிரேடிங் என்ற முறையில் முதலீடு செய்தால் அதிக தொகை லாபமாக பெறலாம் என்று ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பொதுமக்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பறித்த ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவை வடவள்ளி பகுதியைச் சார்ந்த ஸ்ரீனிவாச பெருமாள் என்பவர் தற்போது துபாய் அபுதாபியில் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் இவர் கோவையில் இருந்தபோது கடந்த 28/9/2025-ம் தேதி வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் மூலமாக அழைத்த நபர்கள் ஆன்லைன் டிரேடிங் பிட்காயின் டிரேடிங் ஆகியவற்றில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அவரிடம் இருந்து பல்வேறு தவணைகளில் ரூ.2745800/- பணத்தை பல்வேறு வங்கி கணக்கில் பெற்று மோசடி செய்துள்ளனர்.

இது தொடர்பாக கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் பெறப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதில் கோவை அறிவொளி நகர் பகுதியில் சேர்ந்த வசந்த் (20)என்பவரை கடந்த 24 ஆம் தேதி கைது செய்தும் கோவை மாவட்டம் கோவைபுதூர்

பகுதியைச் சேர்ந்த அஜல் (22) மற்றும் திருப்பூர் மாவட்டம் கொங்கணகிரி சேர்ந்த ஜனகன் (23)ஆகியோரை 26 ஆம் தேதி கைது செய்தும் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த சிம்கார்டு விற்பனையாளரான பரத் (26) என்பவரை 27ஆம் தேதி கைது செய்தும் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (38) என்பவரை கடந்த 7-ம் தேதி கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேற்படி நபர்கள் அவர்கள் தங்களது கூட்டாளிகளுடன் இணைந்து ஆன்லைன் டிரேடிங் என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்தது தெரிய வந்தது இவர்கள் பயன்படுத்திய வங்கி கணக்குகளில் 9 மாநிலங்களில் 15க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வருகிறது.

மேலும் வசந்த் என்பவர் தனது வங்கி கணக்கை வாடகைக்கு விட்டும் அஜல் என்பவர் கமிஷன் ஏஜென்ட் ஆகவும் ஜனகன் என்பவர் வங்கிக்கணக்கு மற்றும் சிம்கார்டுகளை பெற்றுத்தரும் புரோக்கர் ஆகவும் பரத் என்பவர் பொதுமக்களிடம் ஆதார் கார்டுகளை பெற்று அவர்களது அனுமதி இல்லாமல் பயன்படுத்தி 250க்கும் மேற்பட்ட சிம்காரர்களை குற்ற செயல்களுக்கு பயன்படுத்தியதும் உதயகுமார் என்பவர் ஆன்லைன் கேம் மூலம் பணம் பெறுவது தொடர்பாக பிலிப்பைன்ஸ் சார்ந்த நிறுவனத்தில் பணிபுரிந்து பிறகு இந்தியா வந்து பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் வங்கி கணக்குகளை வெளிநாட்டு நபர்களுக்கு மோசடிக்காக பயன்படுத்த அனுப்பும் ஏஜெண்டாக செயல்பட்டதும் விசாரணையில் தெரிய வருகிறது.

உதயகுமாருக்கு சென்னை மத்திய பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது மேலும் இவர்களுடன் சேர்ந்த கூட்டாளிகளை கைது செய்யவும் வேறு நபர்கள் யாரேனும் இவர்களால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை கண்டறியவும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.