மத்திய மற்றும் புதுச்சேரி அரசுகள் நிதியில் கடல் பரப்பில் செயற்கை பாறைகளை இறக்கி மீன்கள் இனப்பெருக்கத்தை உருவாக்க திட்டம் உருவாக்கப்பட்டது.

அதன்படி இன்று காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காரைக்கால் மேடு, கிளிஞ்சல் மேடு கோட்டுச்சேரி, பட்டினச்சேரி உள்ளிட்ட 4 மீனவ கிராமங்களில் தேர்வு செய்யப்பட்டு அந்தந்த மீனவ கிராம கரையில் இருந்து அதனை நோக்கி ஆள் கடலில் பவளப்பாறைகளை ராட்சச இயந்திரங்கள் மூலமாக கடலில் வீசி போடப்பட்டன. இதனை கடலில் மற்றொரு படகுகள் மூலம் இருந்த மீனவர்கள் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆழ்கடல் அடியில் சென்ற செயற்கை பவளப்பாறை கடலில் இருப்பதால் மீனவர்கள் எளிதில் மீன் பிடிக்க வசதி ஏற்பட்டுள்ளது மூன்று மாதத்திற்கு பின் கடல் அடியில் இருக்கும் பவளப்பாறையை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.