• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

குளச்சலில் மீன் வரத்து அதிகரித்ததால் மீன் விலை கிடுகிடு உயர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு 600-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது வரும் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்திற்காக ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர்

அந்த வகையில் இன்று குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் 50-மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்களுடன் ஒரே நேரத்தில் கரை திரும்பினர்

விசைப்படகுகளில் கொண்டு வரப்பட்ட இரால், கணவாய், கிளி மீன் உள்ளிட்ட மீன்கள் விற்பனைக்காக குளச்சல் மீன்பிடி துறைமுக விற்பனை கூடத்தில் மலைபோல் குவிக்கப்பட்டிருந்தது

தகவலறிந்து மீன்களை வாங்க பொதுமக்கள் மட்டுமில்லாமல் உள்ளூர் வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் போட்டி போட்டு மீன்களை வாங்க ஆர்வம் காட்டியதால் மீன் விலை கிடுகிடு வென உயர்ந்தது.

இந்த நிலையில் கிலோ 40-ரூ க்கும் விற்பனையாகும் இறால் மீன் 80-ரூ க்கும், கிலோ 100-ரூ க்கு விற்பனையாகும் கிளி மீன் 150-ரூ க்கும், கிலோ 200-ரூ க்கும் விற்பனையாகும் கணவாய் மீன் 350-ரூ க்கும் விற்பனையானது இதனால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.